கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை காக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை, மூன்றுகட்ட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், தமிழகம் உட்பட,  இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால், இன்று நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டு ஒரு சில தளர்வுகளும் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் ஏற்கனவே தமிழக அரசு சார்பில், ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது... மத்திய அரசு சார்பில், மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து, தளர்வுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள புதிய தளர்வுகள்...

*  65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்.

* மக்கள் அனைவரும் இரவு 7 மணி முதல் -  காலை 7 மணி வரை வெளியில் நடமாட தடை. 

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி.

* பேருந்து பொது போக்குவரத்து துவங்குவது குறித்து மாநில அரசே முடிவெடுக்கும்.

* மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இருமாநில சம்மதத்துடன் இயங்கலாம்.

* மெட்ரோ ரயில், ரயில், விமான சேவைகளுக்கு தடை.

* பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் இயங்காது.

* பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரியது.

*  திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து, 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ள தடை.

* மரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

* வீட்டில் இருந்தே பணி செய்வதற்கு முடிந்தவரை அனுமதி கொடுக்க வேண்டும். 

* பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்கை திறக்க அனுமதி.

* 6 அடி சமூக விலகலை கடைபிடித்து தொழிலாளர்கள் பணிபுரியவேண்டும்.

இந்த  விதிமுறைகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்,  சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய மண்டலங்களின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் அதனை மாநிலங்கள் முடிவெடுக்கும் என்றும் மத்திய அரசின் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.