பக்ரீத் பண்டிக்காக 4 நாட்கள் தொடர் விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த நாட்கள் விடுமுறை கிடைக்கும்? என்பது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றனர். புதிதாக வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல் நாளே நேறு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட உள்ளன. நீண்ட விடுமுறைக்கு பிறகு நேற்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அடுத்து விடுமுறை எப்போது வரும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஈகைப் பெருநாளான பக்ரீத் பண்டிகை விடுமுறை
இந்நிலையில், மத்திய அரசு 4 நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது ஈகைப் பெருநாளான பக்ரீத் பண்டிகைக்காக ஜூன் 6ம் தேதி, 7ம் தேதி, 8ம் தேதி மற்றும் 9ம் தேதி (வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்த விடுமுறை நாட்கள் ஐந்து (5) மற்றும் ஆறு (6) நாட்கள் வேலை வாரத்தைக் கடைப்பிடிக்கும் அலுவலகங்களுக்குப் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போது பக்ரீத் கொண்டாடப்படும்?
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தியாவில் பிறை தெரிவதன் அடிப்படையில் ஜூன் 6 அல்லது 7ம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை நாள் வேறுபடும். இதனைப் பொறுத்து அந்த மாநிலங்களில் விடுமுறை விடப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் விடுமுறை
மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9ம் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
