மத்திய ஆயுதப்படையில் கான்ஸ்டபிள் பணி.. முன்னாள் அக்னி வீரர்களுக்கு சிறப்பு சலுகை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
Agniveers : மத்திய ஆயுதப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.
மத்திய ஆயுதப்படை போலீஸ் துறையில், முன்னாள் அக்னிவீரர்களை அதிக அளவில் சேர்க்கும்பொருட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றே கூறலாம். மேலும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் CISF இப்பொது செய்து வருகின்றது. மத்திய ஆயுதப்படையில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத பதவிகள் ஒதுக்கப்படும் என்று CISF அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு உடல் திறன் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முன்னாள் அக்னிவீரர்களுக்கு, வயது வரம்பிலும் தளர்வு வழங்கப்படும் என CISF டிஜி நீனா சிங் தெரிவித்துள்ளார். இந்த முன்னெடுப்பு CISFக்கு முக்கியமானது, ஏனெனில் இது CISFக்கு பயிற்சி பெற்ற, திறமையான மற்றும் தகுதி வாய்ந்த மனிதவளத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
முதல் மேப் வெளியானது.. ராமர் சேது பாலத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..
இது நமது படைப்பிரிவில் ஒழுக்கத்தை அதிகரிக்க உதவுவதோடு அக்னிவீரர்களுக்கும் CISF-ல் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இது குறித்து BSF DIGயும் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். நமது ஆயுதப்படைக்கான வீரர்களை தயார்படுத்தி வருகிறோம் என்று பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு இதன் மூலம் மேன்படும் என்றார் அவர்.
CRPF டிஜி அனிஷ் தயாள் சிங் கூறுகையில், முன்னாள் அக்னிவீரர்களை CRPF-ல் சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அக்னிவீரர்கள் ராணுவத்தில் பணிபுரியும் போது ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டனர். இந்த ஏற்பாட்டின் மூலம், நாங்கள் முதல் நாளிலிருந்து பயிற்சி பெற்ற மற்றும் ஒழுக்கமான பணியாளர்களை கொண்டிருப்போம் என்றார்.
எதிர்காலத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பதவிக்கான அனைத்து ஆட்சேர்ப்புகளிலும் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் என்றும் ஆர்பிஎஃப் டைரக்டர் ஜெனரல் மனோஜ் யாதவ் கூறியுள்ளார். முன்னாள் அக்னிவீரர்களை வரவேற்பதில் RPF மிகவும் உற்சாகமாக உள்ளது. இது படைக்கு புதிய பலத்தையும், ஆற்றலையும், மன உறுதியையும் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.