கடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள், கடந்த நவம்பர் மாதம் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டன. இருப்பினும், கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மொபைல் பயனாளர்களுக்கான புதிய கட்டண உயர்வை, வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு, இன்று நள்ளிரவு  முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, மொபைல் பயனாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, பார்தி ஏர்டெல் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்களை விட புதிய கட்டணம், 42 சதவீதம் அதிகம் என்றும், இன்று  முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன் மூலம், வோடஃபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் பயனாளர்கள், ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம், 49 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.  

ஐடியா நிறுவனம் தொடங்கியபோது செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டணத்தைக் குறைத்தன. ஆனால் இன்று அனைத்து செல்போன் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தற்போத கட்டணத்தை உயர்த்தியுள்ளன