Asianet News TamilAsianet News Tamil

Breaking : சிபிஎஸ்இ +2 முடிவுகள்.. முதலிடம் பிடித்த திருவனந்தபுரம் மண்டலம்.. சென்னைக்கு எந்த இடம்?

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

CBSE 12th Result 2023 Declared How to check online
Author
First Published May 12, 2023, 10:59 AM IST

நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. results.cbse.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம். இந்த ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில், யார் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என்பதை சிபிஎஸ் இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க யார் முதலிடம் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எந்தெந்த இணையதளங்களில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பார்க்கலாம்

cbseresults.nic.in

results.cbse.nic.in

www.cbse.nic.in

cbse.gov.in

இந்த ஆண்டு மொத்தம் 16.60 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். பல்வேறு சவால்களுக்கு இடையே மாணவர்கள் நடப்பாண்டில் தேர்வு எழுதி இருந்தனர்.  இந்த தேர்வில் நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் 87.33% ஆக உள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், கோவிட்டுக்கு முந்தைய 2019 ஆண்டின்  83.40% தேர்ச்சி சதவீதத்துடன் ஒப்பிடுகையில் சிறப்பாக இருக்கிறது. எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவு தான். அதாவது கடந்த ஆண்டை 5.8% தேர்ச்சி சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க : மாணவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.. கடைசி தேதி இதுதான்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவு:

நடப்பாண்டு தேர்ச்சி சதவீதம் 87.33%
கடந்த ஆண்டு தேர்ச்சி வயது 92.71%

தேர்வெழுதிய மொத்த மாணவிகளில் 90.68% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதே நேரத்தில், தேர்வெழுதிய மொத்த மாணவர்களில் 84.67% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.01%  மாணவிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் திருவனந்தபுரம் மாவட்டம் 99.91 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. 

மண்டல வாரியான தேர்ச்சி சதவீதம்

திருவனந்தபுரம் - 99.91%

பெங்களூரு - 98.64%

சென்னை - 97.40%

டெல்லி, மேற்கு - 93.24%

சண்டிகர் - 91.84%

டெல்லி, கிழக்கு - 91.50%

அஜ்மீர் - 89.27%

புனே - 87.28%

பஞ்ச்குலா - 86.93%

பாட்னா - 85.47%

புவனேஸ்வர் - 83.89 %

கௌஹாத்தி - 83.73%

போபால் - 83.54%

நொய்டா - 80.36%

டேராடூன் - 80.26%

 

டிஜி லாக்கர் மூலம் தேர்வு முடிவை எப்படி பதிவிறக்குவது..?

www.digilocker.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்

cbse board results என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

தேவையான தகவலை உள்ளிடவும்

தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். பின்னர் அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான நேரடி இணைப்பு இதோ

இதையும் படிங்க : இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை எச்சரிக்கை..

Follow Us:
Download App:
  • android
  • ios