இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை எச்சரிக்கை..
இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் பராமரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பல ஏவுதளங்களில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் பராமரித்து வருகிறது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது "தற்போதைய உள்நாட்டு மோதல் கூட பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாதிக்கவில்லை என்று தெரிகிறது, ஏனெனில் அது இந்தியாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பல ஏவுதளங்களில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை பராமரித்து வருகிறது. பயங்கரவாதிகள் வந்துள்ளனர் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளன. தீவிரவாதிகளின் முகாம்களில் இருந்து ஏவுதளங்கள் இந்திய பக்கம் தள்ளப்படுவதற்கு காத்திருக்கின்றன" என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவாலா? நிறுவன தலைவர் கூறுவது என்ன?
நீலம் பள்ளத்தாக்கு, லீபா பள்ளத்தாக்கு மற்றும் ஜீலம் பள்ளத்தாக்கில் உள்ள ஏவுதளங்களில் 10 முதல் 20 வரையிலான பயங்கரவாதிகளின் வெவ்வேறு குழுக்கள் காத்திருக்கின்றன என்று உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் இந்தியப் பகுதியில் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகளை இந்தியப் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மே 23-24 தேதிகளில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசாங்கம் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை ஆக்டிவேட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தும், நகரங்களில் நடக்கும் போராட்டங்களைத் தணிக்க இந்தியாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதா என்று கேட்டதற்கு, “பாகிஸ்தான் ராணுவம் கணிசமான எண்ணிக்கையை பராமரிப்பதால் துருப்புக்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. கண்டோன்மென்ட் நிலத்தில் இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும். என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன, ஆனால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள படைகளின் எண்ணிக்கையில் குறைப்போ அல்லது அதிகரிப்போ இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, கடந்த வாரம் காஷ்மீரில் ஜி-20 கூட்டத்திற்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்தார். SCO வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் முடிந்த பிறகு கோவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர் நேரம் வந்தால், நான் இப்படி தான் பதிலளிப்பேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இம்ரான்கான் கைது சட்டவிரோதமானது… அவரை விடுவிக்க வேண்டும்... பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி!!