சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.முன்னதாக காலை 10 மணிக்கு 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.முன்னதாக காலை 10 மணிக்கு 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி.. சென்னை முன்றாமிடம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மாணவர்கள் cbse.gov.in, cbse.results.nic.in, ர்esults.cbse.nic.in, results.gov.in , digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க:சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம்..

இதில் மாணவர்கள் 91.25% யும் மாணவிகள் 93 % தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 98. 83 % தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்று 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாணவர்கள் 2021 ஆம் ஆண்டில் 99.04 சதவீதம், 2020ஆம் ஆண்டில் 91.46 சதவீதம், 2019 ஆம் ஆண்டில் 91.10 சதவீதம், 2018ஆம் ஆண்டில் 86.7 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.