கர்நாடகா மற்றும் தமிழக அணைகளை பார்வையிட்டு, நீர் இருப்பு மற்றும் தேவை குறித்த ஆய்வு அறிக்கையினை மத்திய உயர்மட்ட குழுவின் தலைவர் ஜி.எஸ். ஜா இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்க்ல செய்தார்.

காவிரி பிரச்சனையில், கர்நாடக மற்றும் தமிழக அணைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ். ஜா தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன், கர்நாடகாவின் காவிரி படுகையில் ஆய்வு நடத்தியது. இதேபோல் தமிழக காவிரி படுகையில் ஆய்வு நடத்தியது. 

இரு மாநிலங்களிலும் தற்போதைய இருப்பு நீர் குறித்த விபரங்களை கேட்டறிந்த உயர்மட்டகுழு விரிவாக ஆய்வு செய்தது. காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூரிலும் உயர்மட்டக் குழு ஆய்வு செய்தது.

தமிழகம் - கர்நாடகத்தில் ஆய்வு பணி முழமையாக முடிந்த நிலையில், ஆய்வறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் மத்திய உயர்மட்ட குழுவின் தலைவர் ஜி.எஸ். ஜா இன்று தாக்கல் செய்தார்.