குழு சுற்றுலா செல்லும் சிறப்பு ரயில்களில் இனி இந்த வசதியும் கிடைக்கும்.. ரயில்வே அறிவிப்பு..
முழு கட்டண சேவையில் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் பெட்டிகள் அல்லது ரயில்களில் தற்போது இந்திய ரயில்வே கேட்ரிங் வசதியையும் வழங்கி உள்ளது.
ஒரு குழுவாக ரயிலில் பயணம் செய்வோர், ஒரு முழு பெட்டியையும் முன் பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்கனவே அறிமுகம் செய்தது. அதன்படி, திருமணம் அல்லது குழு சுற்றுலா செல்லபவர்கள் முழு ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். இது முழு கட்டண சேவை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த முழு கட்டண சேவையில் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் பெட்டிகள் அல்லது ரயில்களில் தற்போது இந்திய ரயில்வே கேட்ரிங் வசதியையும் வழங்கி உள்ளது. இந்த கேட்டரிங் வசதிகளை ஐஆர்சிடிசி மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
எப்போது முன்பதிவு செய்ய வேண்டும்?
இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க அதிகபட்சம் 6 மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது பயணத் தேதிக்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்னதாகவோ முன்பதிவு செய்யலாம்.
ஒருவர் முன்பதிவு செய்யக்கூடிய அதிகபட்ச பெட்டிகளின் எண்ணிக்கை என்ன?
ஒரு ரயிலில் ஒரு சுற்றுப்பயண திட்டத்திற்காக ஒரு தரப்பினர் அதிகபட்சம் 10 பெட்டிகளை முழு கட்டண சேவையில்பதிவு செய்யலாம். ஒரு முழு ரயிலுக்கும், இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் உட்பட, அதிகபட்சமாக 24 பெட்டிகளை முன்பதிவு செய்யலாம்,
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. மழை காரணமாக வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள்.. முழு பட்டியல் இதோ !!
கட்டணம் எவ்வளவு?
ஏழு நாள் பயணத்திற்கு ஒரு பெட்டியை முன்பதிவு செய்ய, ஒரு பெட்டிக்கு 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். பயணம் நீட்டிக்கப்படும் அல்லது நீட்டிக்கப்படக்கூடிய ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும், ஒரு பெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 தொகை செலுத்த வேண்டும். ஒரு ரயிலில் முன்பதிவு செய்ய, ஏழு நாள் பயணத்திற்கு குறைந்தபட்சம் 18 பெட்டிகளுக்கான தொகை ரூ.9 லட்சம். 18 பெட்டிகளை தாண்டினால், ஒரு பெட்டிக்கு ரூ.50,000 கூடுதலாக சேர்க்கப்படும். ஏழு நாட்களுக்கு மேல் பயணம் செய்ய, ஒரு பெட்டிக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் கட்டணம் சேர்க்கப்படும்.
நீங்கள் 18 பெட்டிகளுக்கும் குறைவாக முன்பதிவு செய்ய விரும்பினால் என்ன செய்வது?
18 பெட்டிகளுக்கு குறைவான ரயிலை முன்பதிவு செய்ய நீங்கள் திட்டமிட்டால், குறைந்தபட்சத் தொகையாக இருப்பதால், 18 பெட்டிகளுக்கான தொகை உங்களிடம் வசூலிக்கப்படும்.
எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்?
தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரை (CBS) அணுகி, பயண விவரங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வ கோரிக்கையை வழங்கவும். பின்னர் உங்களுக்கு கணினி உருவாக்கிய சீட்டு வழங்கப்படும். அதை எடுத்துக்கொண்டு UTS கவுண்டருக்குச் சென்று, ஆதார் எண்ணை வைத்து பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பிறகு, பயணிகள் பட்டியலை ரயில் புறப்படும் நிலைய அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவர் இறுதி சான்று வழங்கி உங்களுக்கு கொடுப்பார். ftr.irctc.co.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.