பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தும் கிரெடிட் டெபிட் கார்டுகளுக்கு சேவை கட்டணம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் அறிவிப்பால் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் , டெபிட் கார்டு பயன்படுத்தும் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தப்படும் கிரெடிட் டெபிட் கார்டுகளுக்கு 1% சேவை கட்டணம் விதிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல்  பெட்ரோல் பங்குகளில் கார்டுகள் ஏற்கபடாது பணம் செலுத்தினால் மட்டுமே பெட்ரோல், டீசல், கேஸ் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அதிரடியாக அறிவித்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. 

பின்னர் மேலிடத்திலிருந்து பேசி ஜனவரி 13 க்கு பிறகு கார்டுகளை ஏற்க மாட்டோம் என அறிவித்தனர். பணத்தை ரொக்கமாக பார்த்தே மாசம் மூன்று ஆகிவிட்டது.

சம்பள பணத்தை கூட வங்கி அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே எடுக்க கூடிய நிலை. அதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் காசில்லா வர்த்தகத்துக்கு மாறிவிட்டனர். அதாவது கிரெடிட் டெபிட் கார்டு வர்த்தகத்திற்கு,
தினசரி பெட்ரோல் டீசல் போடவும் அனைத்து பங்குகளிலும் கிரெடிட் டெபிட் கார்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பணமிருந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் என்ற பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு பொதுமக்களை பதற்றத்தில் ஆழ்த்தியது. 

தினசரி இயக்கும் மோட்டார் சைக்கிள் , கார் , ஆட்டோ போன்றவற்றிற்கு பெட்ரோல் டீசல் போட பணத்திற்கு எங்கே போவது என்ற பிரச்சனை எழுந்தது. 
மறுபுறம் வியாபாரத்திற்கு சரக்கு போக்குவரத்து முக்கியம். தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டீசல் போடும் லாரி போக்குவரத்துக்கு இந்த அறிவிப்பு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தும் கிரெடிட் டெபிட் கார்டுகளுக்கு பரிமாற்ற கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 வாடிக்கையாளர் , பங்க் உரிமையாளர் யாரும் கட்டணம் சேவை கட்டணம் செலுத்த தேவை இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தர பிரதன் அறிவித்துள்ளார். 
இதன் மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நெருக்கடி தீர்ந்தது. பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.