அரியானாவில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் இருந்த தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர். 

கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. பிறகு மற்றொரு கார் மீது மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. அதிகாலை நடந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.