இது என்ன நீதிமன்றமா ரயில்வே பிளாட்பார்மா? வழக்கறிஞருக்கு செமத்தியா டோஸ் கொடுத்த நீதிபதி சந்திரசூட்!

பட்டியலிடப்படாத வழக்கை திடீரெனக் குறிப்பிட்டு, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியதால் தலைமை நீதிபதி சந்திரசூட் கோபம் அடைந்தார்.

Cant Just Board Any Train: Chief Justice's Decorum Reminder To Lawyer sgb

உச்ச நீதிமன்ற அறையில் வரம்பு மீறி நடந்துகொண்ட வழக்கறிஞர் ஒருவரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இது ஒன்றும் ரயில்வே பிளாட்பாரம் அல்ல, உச்ச நீதிமன்றம் என்று கூறி கண்டித்துப் பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் திடீரென எழுந்து தனது வழக்கு குறித்து வாதிடத் தொடங்கியதால் நீதிபதி சந்திரசூட் இவ்வாறு கடுமையான கண்டித்திருக்கிறார். நண்பகலில் நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு வழக்கறிஞர் திடீரென எழுந்து, நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக ஒரு பொதுநல வழக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், அது குறித்து அவசர விசாரணைக்கு விரும்புவதாகவும் கூறினார்.

ஆனால், அவரது வழக்கு அன்றைய விசாரணைக்குப் பட்டியலிடப்படவே இல்லை. பட்டியலிடப்படாத வழக்கை திடீரெனக் குறிப்பிட்டுப் பேசியது தலைமை நீதிபதியை கோபமடைய வைத்தது.

ரயில்வே லோயர் பர்த் விதிமுறையில் மாற்றம்! இனி இவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்!

"இது என்ன ஒன்றும் ரயில்வே பிளாட்பாரம் இல்லை. நீதிமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விதிமுறைகள் என்ன என்று சீனியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு வழக்கறிஞர், இல்லையா? எப்போது, ​​​​எப்படி வழக்கில் வாதிடுவது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.

Cant Just Board Any Train: Chief Justice's Decorum Reminder To Lawyer sgb

இதற்கு பதில் கூறிய வழக்கறிஞர், தான் நீதித்துறைக்கு எதிரானவர் அல்ல என்றும், விசாரணையில் முன்னேற்றத்தை மட்டுமே விரும்புவதாகவும் கூறினார். உடனே, அவர் எங்கு வழக்கறிஞராகப் பணிபுரிகிறார் என்று தலைமை நீதிபதி கேட்டார். அவர் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி "நீங்கள் ஏன் நீதிமன்ற அறையின் பழக்கவழக்கங்களில் பயிற்சி அளிக்கக்கூடிய மூத்த வழக்கறிஞர் ஒருவருடன் பணியாற்றக்கூடாது" என்று கேட்டார்.

இந்த மாதத் தொடக்கத்திலும் ஒரு வழக்கின் விசாரணையின்போது, ஒரு வழக்கறிஞர் ஹை-பிச் வாய்ஸில் குரலை உயர்த்திப் பேசியபோது, தலைமை நீதிபதி அந்த வழக்கறிஞரைக் கண்டித்தார்.

"நீங்கள் எங்கே வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறதா? இங்கே குரலை உயர்த்தி எங்களை அச்சுறுத்த முடியாது. எனது 23 வருட நீதிமன்ற அனுபவத்தில் இப்படி நடந்ததே இல்லை. எனது கடைசி ஆண்டிலும் அதை அனுமதிக்க முடியாது. உங்கள் குரலை தாழ்த்திக்கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, நீதிமன்ற அறைக்குள் ஒரு வழக்கறிஞர் தனது செல்போனில் பேசுவதை கவனித்த தலைமை நீதிபதி, "நீதிமன்றம் செல்போனில் அரட்டை அடிக்கும் சந்தைக்கடையா" என்று காட்டமாகக் கேட்டதோடு, நீதிமன்ற ஊழியர்களிடம் அவரது செல்போனை பறிமுதல் செய்யும்படியும் உத்தரவிட்டார்.

மதுரை கோயிலில் பிரியாணி திருவிழா! 200 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு தடபுடலான அன்னதானம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios