Asianet News TamilAsianet News Tamil

தேசியக் கொடியை ஆடையாக அணியலாமா?

நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15(நாளை) கொண்டாடப்படுகிறது. நம் தேசியக்கொடியை நாம் எவ்வாரெல்லாம் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதை தெரிந்துகொள்வோம். தேசியக்கொடியை நாம் ஆடையாக அணியலாமா? விடை தருகிறது இந்த செய்தித் தொகுப்பு
 

Can we wear the national flag as a dress or not? dee
Author
First Published Aug 14, 2024, 4:51 PM IST | Last Updated Aug 14, 2024, 4:51 PM IST

தேசியக்கொடி என்பது நம் உணர்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. நம் தேசிய கொடிக்கான வராலாறு 1906ம் ஆண்டு முதல் தொடங்குகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கான வேறுமாதிரி இருந்தது. ஆனால், இந்திய சுதந்திர போராட்டத்திற்கென்று ஒரு கொடி தேவைப்பட நிலையில், 1921ம் ஆண்டு சுதந்திர போராட்டத்திற்கு என்று ஒரு அடையாளமாக ஒரு கொடி அமைக்கப்பட்து,

நம் தேசப்பற்றை தூண்டும், பாரத சுதந்திரத்தின் அடையாளமாக விளங்கும் மூவர்ண கொடியை பிங்கை வெங்கையா என்பவர் வடிவமைத்தார். இவர் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுக்கூடியவர், எனவே இவரை ஐப்பான் வெங்கையா என்றும் அழைக்கப்பட்டார்.

ஜப்பான் வெங்கையா, இந்தியாவில் இருந்துகொண்ட பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றிவந்ததா். அப்போது போரில் கலந்துகொள்ளுவதற்காக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அப்போது ஜாக் பிரிட்டிஷ் வீரர்களை பார்த்த வெங்கையாவுக்கு தேசிய உணர்வு ஏற்பட்டது. அதன்பிறகு, தாயகம் திரும்பிய பிங்கை வெங்கையா சுதந்திர போராட்டங்களில் தீவிரமாக ஈடுப்பட்டார். அப்போதுதான் பாரத சுதந்திர போராட்டத்திற்கு தேசியக் கொடி ஒன்று அவசிய தேவை என்பதை உணர்ந்து அதற்காக பணிகளில் ஈடுபட்டார்.

முதன் முதலில் அவர் வடிவமைத்த கொடியில் காவி மற்றும் பச்சை வண்ணங்கள் மட்டுமே இருந்தது. மேலும் அதன் நடுவே, காந்திந கதர் ராட்டை சக்கரம் இடம்பெற்றிருந்தது. பின்னர், காந்தியின் ஆலோசனைக்குப் பிறகு அதில் வெள்ளை நிறம் சேர்கப்பட்டு மூவர்ணக்கொடியாக மாறியது. பின்னர், 1947ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் கொடியாக மூவர்ணக் கொடியின் மையத்தில் கதர் ராட்டை நீக்கப்பட்டு அசோக சக்கரமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய தேசிய கொடி பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..

தேசியக் கொடியை எப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாது?

  • தேசியக்கொடியை தலைகீழாக பயன்படுத்தக்கூடாது. மேலே காவி நிறம் - கீழே பச்சை நிறம் வரும் படி அமைக்க வேண்டும்
  • தேசியக்கொடியை சதுரமாக இருக்க கூடாது. அது 3;2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்
  • கிழிந்த அல்லது அழுக்க படிந்த தேசிய கொடியை பயன்படுத்த கூடாது
  • தேசியக்கொடியை எந்தவித அலங்கார நோக்கத்திற்கும் பயன்படுத்தக்கூடாது
  • தேசியக்கொடியை தரையில் போட்டுவைக்கக்கூடாது.

தேசியக்கொடியில் ஆடை?

தேசியக்கொடியை ஆடையாகவோ, ஆடையின் ஒரு பகுதியாகவோ, அச்சிடவோ கூடாது. கைக்குட்டையிலும், சிறு எம்பிராய்டரி செய்வது கூடாது. தேசியக்கொடி மீது எச்சில் துப்புவதோ கூடாது. தேசியக்கொடியைக்கொண்டு தலையில் கட்டுவதோ, பொருட்களை கட்டுவதோ கூடாது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios