இமாச்சலப் பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 25 படுகாயமடைந்துள்ளனர்.

 

சிராமுர் மாவட்டத்தில் உள்ள நஹன், ரேணுகா சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோல் சிம்லாவுக்கு சுற்றுலா வந்த மற்றொரு பேருந்தும் விபத்தில் சிக்கியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பேருந்து விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.