மத்தியபிரதேசத்தில் பள்ளி வேன் மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 

மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் பீர்சிங்பூரில் உள்ள லக்கி கான்வென்டில் படிக்கும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட 7 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் படுகாயத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காணரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'சட்னா விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்துள்ளேன். விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.