Asianet News TamilAsianet News Tamil

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'புல் புல்' புயல் ! 10 நாட்களுக்குள் 3 புயல்கள் ! தமிழ்நாட்டுக்கு மழை இருக்குமா ?

வங்கக்கடலில், அந்தமான பகுதியில், 'புல் புல்'  என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இதில் தமிழகத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இந்தப் புயல்  ஒடிசாவை நோக்கி நகரும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

bul bul cyclone in bay of bengal
Author
Chennai, First Published Nov 6, 2019, 8:39 AM IST

வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, 'கியார்' புயல், இரண்டு நாட்களுக்கு முன், ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் சுழலும் மற்றொரு புயலான, 'மஹா' இன்று, குஜராத்தில் கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த பகுதி, புதிய புயலாக வலுப் பெற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள, 'புல் புல்' என்ற, பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'புல் புல்' என்பது, அரபி மொழியில் அழைக்கப்படும், பாடும் பறவை. புல் புல் புயல், படிப்படியாக வலுப்பெற்று, வங்கக்கடலின் வடமேற்கு திசையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்றும், வங்கதேசத்தை ஒட்டி, கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் கணித்துள்ளது.

bul bul cyclone in bay of bengal

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய  இயக்குனர் பாலச்சந்திரன் , வங்கக்கடலில் உருவாகியுள்ள, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வடமேற்கு திசையில் நகரும். இது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது. 

bul bul cyclone in bay of bengal

புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்; சூறாவளி காற்று வீசும். எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு, மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம். புல் புல் புயலால், தமிழகத்துக்கு எந்தவிதமான மழையும் இருக்காது. அடுத்த இரண்டு நாட்களில், தமிழகம், புதுச்சேரியில், பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

bul bul cyclone in bay of bengal

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி  இன்னும் ஒரு மாதம் முடியாத நிலையில், இந்திய பெருங்கடலில் மூன்று புயல்கள் அடுத்தடுத்து உருவாகி உள்ளன. வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. அக்., 25ல் அரபிக்கடலில், 'கியார்' புயல் உருவானது. இந்த புயல், நேற்று முன்தினம் ஓமன் நாட்டில் கரையை கடந்தது. கரையை கடக்கும் முன், அரபிக்கடலில், அக்., 30ல், 'மஹா' புயல் உருவானது.

bul bul cyclone in bay of bengal

கடந்த, 120 ஆண்டுகளில், ஒரே நேரத்தில் அரபிக்கடலில் இரண்டு புயல்கள் சுழன்றது, புதிய வரலாறு. மஹா புயல், நாளை குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில், புதிய புயல், 'புல் புல்' உருவாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios