மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் இன்றி ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று பெற்றது. உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஆனந்த் குமார் உள்ளிட்டோர் இகூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கும் என்றும் பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என்றும், 3 கட்டங்களாக கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

முதல்முறையாக இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் இன்றி ஒரே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.