Budget Session: அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: மக்களவை ஒத்திவைப்பு

பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மக்களவை பிற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டது.

Budget Session: The Lok Sabha session was deferred until 2 p.m. to discuss the Adani Group issue.

பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மக்களவை பிற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்ககட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் இன்று நாடாளுமன்ற கூட்ட அரங்கில்  ஆலோசனை நடத்தினர். அ்ந்த ஆலோசனை முடிவில் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து எழுப்பி விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

தீப்பிடித்த கார்... வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பலி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதிக் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

காங்கிரஸ் மற்றும்ஆம் ஆத்மி, பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம், அதானி பங்கு சரிவு, குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவரிடம் இன்று நோட்டீஸ் அளித்தனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்  “ மக்களவை கேள்வி நேரத்துக்கு பி்ந்தைய நேரத்தை ரத்து செய்து, பிற அலுவல்களையும் விதிப்படி ரத்து செ்யது, எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பு குறித்து விவாதிக்க வேண்டும். 
நாடாளுமன்றத்தின் வழக்கமான அலுவல்களை ரத்து செய்து விவாதிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்

மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட ‘அமிர்த காலம்’ என்றால் என்ன?

தெலங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி கூறுகையில் “ இந்திய மக்களும், இந்திய நிறுவனங்களும் எவ்வளவுபெரிய ஆபத்தில் இருப்பதை ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது அதை பற்றி விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தது.

இதையடுத்து மக்களவை தொடங்கியதும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அதானி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கூச்சலிட்டனர். இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவியது. 

அப்போது பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா “ கேள்வி நேரம் முக்கியமானது இதில் அவை உறுப்பினர்கள் இடையூறு செய்ய வேண்டாம்”எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு கூச்சலிட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத்தலைவர் உத்தரவி்ட்டார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios