Kannur Car Fire: தீப்பிடித்த கார்... வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பலி
கண்ணூர் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை அருகே காலை 10:30 மணியளவில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் கார் தீப்பிடித்த விபத்தில் கருவுற்றிருந்த பெண் உட்பட இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கார் தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பிரஜித் மற்றும் அவரது மனைவி ரீஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்ணூர் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை அருகே காலை 10:30 மணியளவில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
காரில் ஆறு பேர் இருந்தனர். காரை ஓட்டி வந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் முன் இருக்கையிலும், நான்கு பேர் பின் இருக்கையிலும் இருந்தனர். காரின் கதவு அடைக்கப்பட்டதால் முன் இருக்கையில் இருந்த இருவர் தப்பிக்க முடியவில்லை.