பிஎஸ்என்எல் சார்பில் தொலைபேசி, பிராட் பேண்ட் விற்பனை மேளா நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு தொலைபேசி வட்டம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்க, தொலைபேசி பிராட் பேண்ட் விற்பனை மேளா நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மறு இணைப்பில் சேர்ப்பது, வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இதன்படி, "எல்எல் 49' தொலைப்பேசி திட்டத்தில், மாத கட்டணம் ரூ.49 செலுத்தினால் போதும், இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 7 வரை நாடு முழுவதும் அனைத்து நாள்களுக்கும் இலவச அழைப்புகள் பெறலாம். மேலும் ஒரு இணைப்புக்கு இலவச சிம்கார்டு, அதிக பிராட் பேண்ட் சேவைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

அதேபோல், "பிபி 249', "பிபிஜி காம்போ' "யுஎல்டி 1199' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக என பிஎஸ்என்எல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது