jharkhand coal mine collapse :ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்களை மண் மூடியதாகவும், ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்களை மண் மூடியதாகவும், ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன:

ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் மாவட்டத்தில் பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது. 60 அடி ஆழமுள்ள இந்த நிலக்கரி சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த நிலக்கரங்கத்தில் திடீரென இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. 

இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், போலீஸார் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி தேடுதல் நடத்தினர். அதில், இந்த நிலச்சரி சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டது, யாரும் இதில் வேலை செய்யவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் கூறுகையில் “ இந்த சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்படும்போது அங்கு எந்தத் தொழிலாளர்களும் இல்லை. யாருக்கும் எந்த காயமும் இல்லை, யாரும் உயிரிழக்கவும் இல்லை” எனத் தெரிவித்தார்

இந்த மாதத் தொடக்கத்தில் தியோகர் மாவட்டத்தில் உள்ள திர்குத் மலைப்பகுதியில் ரோப்கார் ஒன்றோன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியிருந்த 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏறக்குறைய 46 மணிநேரப் போராட்டத்துக்குப்பின் இந்திய விமானப்படையின் இரு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். 

ரோப் காரில் சிக்கியிருந்த பயணிகளுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பலியானார்ள். இரு பயணிகள் ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறிவிழுந்து உயிரிழந்தனர். மூன்றாவது நபரும் ஹெலிகாப்டரிலிருந்து தவறிவிழுந்தார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலன் அளி்க்காமல் உயிரிழந்தார்.