பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிக்குண்டு வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிக்குண்டு வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் நாளாந்தாவில் ஜன்சபா என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றிருந்தார். அப்போது விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. இதை அடுத்து முதலமைச்சரின் பாதுகாவலர்கள் முதலமைச்சர் நிதிஷ்குமாரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த வெடிகுண்டு வீசியது தொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது. இதை அடுத்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பான ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
