அக்பர் லோன் வழக்கு.. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கபில் சிபில் - அகிலேஷ் மிஸ்ராவின் காட்டமான பதிவு!
ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதன்மை மனுதாரர் முகமது அக்பர் லோனின் வழக்கறிஞர் கபில் சிபல் மீது புளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரியும், பாஜக ஆதரவாளருமான அகிலேஷ் மிஸ்ரா மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கின் முக்கிய மனுதாரர் முகமது அக்பர் லோன் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவை வெறுப்பதாகவும் அகிலேஷ் மிஸ்ரா தனது X (ட்விட்டர்) பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். கபில் சிபல் நாட்டை எதிர்க்கும் ஒருவரின் வழக்கை ஆதரித்து போராடுகிறார் என்றும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இரண்டு முறை அமைச்சராக இருந்த கபில் சிபல், INDIA கூட்டணிக்கு முக்கியமானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கபில் சிபல் மீதான குற்றச்சாட்டு என்ன?
சட்டப்பிரிவு 370 வழக்கில் முக்கிய மனுதாரரான முகமது அக்பர் லோன், வெளிப்படையாக பாகிஸ்தானை சார்ந்தும், இந்தியாவை வெறுத்தும் பேசிவருகின்றார் என்று அகிலேஷ் மிஸ்ரா கூறினார். இந்த நிலையில் கபில் சிபல், லோன் சார்பில், காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வாதிடுகிறார் என்று காட்டமாக கூறியுள்ளார் அவர்.
இந்தியாவை விட பாகிஸ்தானுடன் தான் நெருக்கமாக இருப்பதாக லோன் வெளிப்படையாக கூறும் நிலையில். கபில் சிபில் அவர்களும் இந்தியாவை விட பாகிஸ்தானை தான் லோன் அதிகம் நேசிப்பதாக கூறுகின்றார். லோன் மூலம் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" முழக்கங்களை மறைமுகமாக பாதுகாக்கும் வகையில் சிபல் காணப்படுகிறார் என்றும் அஃகிலேஷ் கூறியுள்ளார்.
ஜெகன் பாண்டியனை திமுக வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
வேறு எந்த வழக்கறிஞராக இருந்தாலும், இப்படி ஒரு கட்சிக்காரரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வெட்கத்தால் முகத்தை மறைத்திருப்பார். ஆனால் சிபல் அப்படி செய்யவில்லை என்றும் கடுமையாக அவர் சாடியுள்ளார்.
ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் சார்பு நிகழ்ச்சி நிரலை முகமது அக்பர் லோன் நடத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். லோன் 2002-2018 வரை தேசிய மாநாட்டு எம்எல்ஏவாகவும், 2019 முதல் லோக்சபா எம்பியாகவும் இருந்தார். இந்தியாவை விட பாகிஸ்தானை தான் அதிகம் நேசிக்கிறேன் என்று லோன் கிட்டத்தட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தியுள்ளார் என்கிறார் அகிலேஷ்.
லோன் தன்னை ஒருபோதும் இந்தியராகக் கருதவில்லை என்று குற்றம் சாட்டினார் அவர். மக்களவைத் தேர்தலில் லோன் பயங்கரவாதிகளின் உதவியை நாடியதாக மிஸ்ரா குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய நபரின் வழக்கறிஞராக இப்பொது திகழ்கிறார் கபில் சிபல் என்றார் அவர்.
லோனின் வழக்கறிஞர் கபில் சிபல், காங்கிரஸ் மற்றும் சோனியா காந்திக்கு மிகவும் பிடித்தமானவர் என்று அவர் கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். முன்பு காங்கிரஸிலும் இப்போது I.N.D.I.Aவிலும் இருக்கிறார் என்றார்.
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு! ஆவேசமான உ.பி. சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா!