4807  கோடி ரூபாய் கறுப்புப் பணம் பிடிபட்டது…வாய் பிளந்த வருமானவரித்துறை அதிகாரிகள்…

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்இதுவரை 4,807 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ளப் பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8-ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன பிரதமர் நரேந்தி மோடி அறிவித்தார். 

இதனையடுத்துவருமானவரித்துறை  அதிகாரிகள் கருப்பு பணம் பதுக்கியிருந்தவர்களின் இடங்களில் சோதனை நடத்திபணம், நகை, ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வருமான வரி சட்டத்தின்படி நாடு முழுவதும் இதுவரை 1,138 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

வரி ஏய்ப்பு, ஹவாலா பணபரிமாற்றம் போன்ற புகார்கள் காரணமாக பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 5,184 பேருக்குநோட்டீஸ் அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 5ந் தேதி வரை நடத்தப்பட்ட  சோதனையில் 609.39 கோடிக்கு பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 112.8 கோடி ரூபாய். நகையின் மதிப்பு மட்டும் 97.8 கோடிரூபாய். கணக்கில்காட்டப்படாத கருப்பு பணம் 4,807.45 கோடி ரூபாய் என  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை இதுவரை பண பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், ஊழல் போன்ற 526வழக்குகளை துணை நிறுவனங்களான சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகியவைகளின் விசாரணைக்கு அனுப்பியுள்ளது என இந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது