மோசமான வானிலை.. சாலைகள் துண்டிப்பு.. ஆன்லைனில் திருமணம் செய்த ஜோடி.. எங்கு தெரியுமா?
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மணமக்கள் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டனர்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், வீடுகள் சேதம் காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால் மாநிலம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த கனமழையால் சுமார் 4000 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை, வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடியின் திருமணம் தடை படும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஆசிஷ் சிங்கா - ஷிவானி ஜோடி ஆன்லைனில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
சிம்லாவில் உள்ள கோட்கரில் வசிக்கும் ஆசிஷ் சிங்கா, குலுவில் உள்ள பண்டரை சேர்ந்த ஷிவானி தாக்கூரை திருமணம் செய்ய முடியாமல் சூழல் உருவானது. எனவே திருமணத்தை நடந்த மாற்று வழியை கண்டுபிடித்த அந்த குடும்பங்கள், வீடியோ கான்பிரன்சிங் முறையில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி வானிலையால் ஏற்படும் சவால்களை சமாளிப்பது மட்டுமல்லாமல் விருந்தினர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஆன்லைனில் திருமணம் நடைபெற்றது.
திருமண ஊர்வலத்துடன் ஆஷிஷ் சிங்க திங்கள்கிழமை பூண்டரை அடையத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை ஏற்படுத்திய பேரழிவின் மையமாக குலு மாவட்டம் இருந்தது. எனவே குடும்ப உறுப்பினர்கள் திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவு செய்ததாக தியோக் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங்கா தெரிவித்தார். மக்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் கொண்டாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை மரணம்! 4 மாதங்களில் 7வது சாவு!