பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7:45 மணியளவில் மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசி வீட்டு தப்பியோடினர்.
மொகாலியில் காவல்துறையின் உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7:45 மணியளவில் மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசி வீட்டு தப்பியோடினர். இந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கட்டடத்தின் 3வது தளத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதமடைந்தன.

கையெறி குண்டுவீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த கையெறி குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உளவுத் துறை அலுவலகத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் காவல் துறை இயக்குனரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
