BJP to run without knowledge of GST
நாடுமுழுவதும் இன்று சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரி நடைமுறைக்கு வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மாநில பா.ஜனதா அமைச்சருக்கு ஜி.எஸ்.டி.வரிக்குவிளக்கம் கூட சொல்லத்தெரிவில்லை, இதையடுத்து, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒட்டம எடுத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆத்தியநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. இந்த அரசில் சமூக நலத்துறை, எஸ்.பி., எஸ்.டி. பிரிவு நலத்துறை அமைச்சராக இருப்பவர் ராமாபதி சாஸ்திரி.
இந்நிலையில் லக்னோ அருகே மஹாராஜ்கஞ் நகரில் அரசின் சார்பில் நலத்திட்ட நிகழ்ச்சிேநற்று நடந்தது. இதில் பங்கேற்க அமைச்சர் ராமாபதி சாஸ்திரி வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின் ராமாபதி சாஸ்திரி, உள்ளூர் தொழிலதிபர்களுடன் ஜி.எஸ்.டி. வரியின் நன்மைகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அமைச்சரை சுற்றி இருந்த நிருபர்கள் அவரிடம், ஜி.எஸ்.டி. வரிக்கு விளக்கம் என்ன கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியைக் கேட்டதும் பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் ராமாபதி, திருதிருவென முழித்து, தனது உதவியாளர்களிடம் விளக்கம் கேட்டார். ஆனால், அவர்கள் ஆங்கிலத்தில் சொன்ன பதில் அமைச்சருக்கு புரியவில்லை. இதனால், ஜி.எஸ்.டி. வரிக்கான ஆங்கில விரிவாக்கத்தை சரியாகக் கூறமுடியாமல் தவறாக உச்சரித்தார். இதனால் அந்த இடத்தில் ஒரே சிரிப்பலை நிலவியது.
இதை உடனடியாக சமாளித்த அமைச்சர் ராமாபதி, “ எனக்கு ஜி.எஸ்.டி. வார்த்ைதக்கானவிளக்கம் தெரியும். நான் அந்த வரி தொடர்பான அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்தபின் உங்களிடம் பேசுகிறேன்’’ எனக் கூறிவிட்டு காரில் வேகமாகச் சென்றுவிட்டார். அமைச்சர் சென்ற பின் அந்த இடமே சிரிப்பலையால் நிரம்பியது.
ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு வரும் ஜி.எஸ்.டி. வரி குறித்து அமைச்சர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 2 நாட்களுக்கு முன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிலரங்கை ஏற்பாடு செய்து இருந்தார். மேலும், ஜி.எஸ்.டி. குறித்து ஒவ்வொரு அமைச்சரும், எம்.எல்.ஏ.வும்மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், அமைச்சர் ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வார்த்தைக்கே விளக்கம் தெரியாத நிலையில் மக்களுக்கு எப்படி விளக்குவார்? என்பது சந்தேகமே.
