மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. அம்மாநில சட்டப்பேரவைக்கு நடப்பாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட 39 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று கூடி ஆலோசித்தது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டன் பிரியாணி, சிக்கன் 65: திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு விருந்து!
வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே, பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூடும். ஆனால், அதற்கு முன்னதாகவே கூடியுள்ளது, எதிர்வரவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. கடந்த 2018 தேர்தலில் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக தோல்வியடைந்தது. இருப்பினும், காங்கிரஸில் கட்சியின் உட்கட்சி பூசல் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். ஆனால், அக்கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். இதனால், பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் இழந்ததால், பாஜக ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
