Asianet News TamilAsianet News Tamil

டுவிட்டரில் கழுவி ஊத்துறாங்க… மன்னிப்பு கேட்டு கெஞ்சிய பா.ஜனதா எம்.பி. தருண் விஜய்...

BJP MP Tarun Vijay Shocks With Racist Comment Apologises
bjp mp-tarun-vijay-shocks-with-racist-comment-apologise
Author
First Published Apr 7, 2017, 7:27 PM IST


தமிழர்கள் உள்ளிட்ட தென் இந்தியர்கள் கறுப்புர்கள் என்று பாரதியஜனதா கட்சியின் எம்.பி. தருண் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றத் தொடங்கினர். இதையடுத்து, அவர் மனம் வருந்தி மன்னிப்பு கோரினார்.

தனியார் சேனல்

இந்நிலையில், இந்தியா-ஆப்பிரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு குழுவின் தலைவரும், எம்.பி.யுமான தருண் விஜயுடன், அல்ஜசீரா சேனல் நேற்று முன்தினம் சிறிய விவாத நிகழ்ச்சி நடத்தியது.

இந்தியர்கள் நிறவெறியர்களா?

அப்போது, நிகழ்ச்சியில் நெறியாளர் ஒரு கேள்வி எழுப்பினார், அதில், “ ஏன் இந்தியர்களை நிறவெறியர்கள் என மக்கள் கூறுகிறார்கள் என்று கேட்டார் அதற்கு பதில் அளித்து தருண்விஜய்பேசுகையில், “  உண்மையில் இந்தியர்கள் நிறவெறியர்களாக இருந்தால், தங்களைச் சுற்றி இருக்கும் கறுப்பு நிற மக்களோடு வாழ்ந்து இருக்க மாட்டார்கள். நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வாழும் கறுப்பு இன மக்களோடு ஏன் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்?. எங்கள் நாட்டிலும் கறுப்புநிற மக்கள் இருக்கிறார்கள், கறுப்பு இன மக்கள் எங்களைச் சுற்றி இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

டுவிட்டரில் கண்டனம்

இந்த கருத்தை தருண் விஜய் கூறியவுடன், சமூக வலைதளங்களில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டுவிட்டரில் ‘ தென் இந்தியர்கள்தான் அரசியல்வாதிகளின் இலக்காகிறார்கள்’ என்றனர்.

மற்றொருவர், ‘ தருண்விஜய் மணிப்பூர் மக்களை கூறி இருக்கிறார், தென் இந்தியர்களை கூறவில்லை என்று நக்கலுடன் டுவிட் செய்து இருந்தார். தருண்விஜய் இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என்றும், நீங்கள் கூறிய மதராசிகள் நாங்கள் தானா? என கழுவி ஊற்றத் தொடங்கினர்.

மன்னிப்பு கோரினார்….

இதையடுத்து டுவிட்டரில் தருண் விஜய் தான் கூறியது குறித்து தன்னிலை விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

அதில் அவர் கூறியதாவது “ நான் பேசியதை மறுபடியும் கேளுங்கள். இந்தியர்கள் குறித்து கேட்டபோதுதான் அதற்கு பதில் அளித்தேன். இப்போது திரித்துக் கூறப்படுவதுபோல், நான் பேசவில்லை.

நாட்டின் பல மாநிலங்களில், பல்வேறுபட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நிறத்தின் அடிப்படையில் அந்த மக்களுக்கு எதிராக நாங்கள் வேறுபடுத்தி பார்த்தது இல்லை. என்னுடைய வார்த்தைகள் நான் கூறநினைத்ததை முழுமையாக சொல்ல முடியவில்லை.

எந்த விதமான அரசியல் பாகுபாடின்றி, தமிழர்கள், வங்காளிகள், தெலுங்கு பேசும் மக்களுடன் இணைந்து தமிழ்கலாச்சாரத்துக்காக தொண்டு செய்து வருகிறோம். நான் ஒருபோதும், எப்போதும் தென் இந்தியர்கள் கறுப்பர்கள் என்று கூறவில்லை. என் மீது ஆத்திரத்தையும், கோபத்தையும் காட்டுவதற்கு முன் நான் பேசியதை கேளுங்கள்.

நான் வணங்கும் கிருஷ்ணரே கறுப்புதான்.அப்படி இருக்கும் போது நான் எப்படி நிறவெறியோடுபேசுவேன்?

எப்படி என் சொந்த மக்களையும், கலாச்சாரத்தையும், நாட்டையும் நானே கேலி செய்வேன். அதற்கு நான் செத்துவிடுவேன். என்னை கடும் வார்த்தைகளோடு விமர்சிப்பதற்கு முன் சிறிது யோசியுங்கள். நான் அப்படி பேசவில்லை. நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios