Asianet News TamilAsianet News Tamil

அதிகரித்தது பாஜகவின் பலம்..!இடைத்தேர்தலில் 2 மக்களவை மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி

ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 3 மக்களவை தொகுதிக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 

BJP has won 2 Lok Sabha and 3 Assembly seats in by elections across the country
Author
India, First Published Jun 26, 2022, 5:29 PM IST

 இடைத்தேர்தல்-பாஜக வெற்றி

டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திரிபுராவில் உள்ள  அகர்தலா, டவுன் போர்டோவாலி, சுர்மா மற்றும் ஜுப்ராஜ்நகர்    நான்கு சட்டப்பேரவைத் தொகுதி முடிவைகளை ஆர்வமோடு மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். குறிப்பாக இதில் முதல்வர் மாணிக் சாஹா ஒரு முக்கிய வேட்பாளராக களத்தில் இருந்தார். இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தங்கள் வேட்பாளர்களை நான்கிலும் தனித்தனியாக போட்டியிட வைத்துன. இதன் காரணமாக பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் வாக்குகள் பிரிந்து பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக முன்னிலை..! பஞ்சாப் மக்களைவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் முன்னிலை

Narendra Modi: G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி வந்தடைந்தார்...உற்சாக வரவேற்பு...

BJP has won 2 Lok Sabha and 3 Assembly seats in by elections across the country

ஷிரோமனி அகாலிதளம் வெற்றி

 இதே போல பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் வேட்பாளர் சிம்ரன்ஜித் சில் மான் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் 3 வது இடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 2 மக்களவை தொகுதி இடைதேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில்  3 மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக இரண்டு இடங்களிலும், சட்ட மன்ற தேர்தலில் 3 இடங்களிலும் வெற்றி பெற்று தனது பலத்தை அதிகரித்துள்ளது.


இதையும் படியுங்கள்

40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேராக போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பப்படும்… சஞ்சய் ராவத் பரபரப்பு கருத்து!!

Follow Us:
Download App:
  • android
  • ios