Asianet News TamilAsianet News Tamil

உ.பி.யில் இவிஎம் மெசினில் கை வைக்காவிட்டால் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. பாஜகவை டேமேஜ் செய்த மாயாவதி.!

தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதைத் தேர்தல் ஆணையம் நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். 

BJP guarantees defeat if it does not touch EVM machine in UP .. Mayawati who damaged BJP.!
Author
Lucknow, First Published Jan 9, 2022, 10:35 PM IST

உத்தரப் பிரதேச தேர்தலில் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருந்தால் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைஹ் தேர்தல் தொடங்குகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 10 அன்று தொடங்குகிறது. மார்ச் 7-இல் இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. இழந்த ஆட்சியைக் கைப்பற்றும் வேகத்தில் சமாஜ்வாடியும் உள்ளது. இந்த முறை கவுரமான வெற்றியை காங்கிரஸ் எதிர்நோக்கியிருக்கிறது. 2007 முதல் 2012 வரை ஆட்சி செய்த பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் சைலண்ட் மோடிலெயே தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தது.BJP guarantees defeat if it does not touch EVM machine in UP .. Mayawati who damaged BJP.!

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில். லக்னோவில் அக்கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு இயந்திரம் சரிவரச் செயல்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்தின் மீதான பயம் மிகவும் அவசியம். தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதைத் தேர்தல் ஆணையம் நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும். அரசு இயந்திரத்தையும் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருந்தால் இந்த தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும்.

 BJP guarantees defeat if it does not touch EVM machine in UP .. Mayawati who damaged BJP.!

உத்தரப்பிரதேசம் மட்டுமல்ல, ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலும் அமைதியாக நடைபெற வேண்டும். காவல் துறையினர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். உத்தரப் பிரதேச மக்கள் வளர்ச்சிக்காக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் எங்கள் கட்சி முறையாகப் பின்பற்றி பிரசாரம் செய்யும். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும்" என்று மாயாவதி தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios