Asianet News TamilAsianet News Tamil

பாஜக அரசுக்கு பெருபான்மை இல்லை... மோடியுடன் மல்லுக்கட்டும் சிவசேனா..!

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர். தற்போதைய பாஜக அரசுக்கு பெருபான்மை இல்லை என்றும், ஆட்சிமையக்க எங்களிடம் பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். 

bjp government does not have a majority...Congress NCP Shiv Sena leaders
Author
Maharashtra, First Published Nov 25, 2019, 2:00 PM IST

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர். தற்போதைய பாஜக அரசுக்கு பெருபான்மை இல்லை என்றும், ஆட்சிமையக்க எங்களிடம் பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். 

மகாராஷ்டிராவில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக சனிக்கிழமை காலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

bjp government does not have a majority...Congress NCP Shiv Sena leaders

உடனே சரத்பவார் இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும், தேசியவாத காங்கிரஸ் முடிவு இல்லை என்றும் விளக்கமளித்திருந்தார். அத்துடன் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

bjp government does not have a majority...Congress NCP Shiv Sena leaders

இந்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சியமைக்க உரிமைகோரி உள்ளனர். தற்போதைய பாஜக அரசுக்கு பெருபான்மை இல்லை என்றும் 3 கட்சிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios