தேர்தல் பத்திரங்களில் ரூ.1,300 கோடி வசூல் செய்த பாஜக! காங். பெற்றதைவிட 7 மடங்கு அதிகமாம்!

2021-22ல் நிதியாண்டில் பாஜக ரூ.237 கோடியை வட்டி மூலம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.135 கோடியாக இருந்தது.

BJP Got Nearly Rs 1,300 Crore Through Electoral Bonds, seven times more than what the Congress Received sgb

மத்தியில் ஆளும் பாஜக 2022-23 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ.1,300 கோடியைப் பெற்றுள்ளது. இது அதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றதை விட ஏழு மடங்கு அதிகம்.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்துள்ள ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் பாஜக பெற்ற மொத்த தொகை ரூ.2120 கோடி. இதில் 61 சதவீதம் தேர்தல் பத்திரங்களில் இருந்து வந்தது.  2021-22 நிதியாண்டில், பாஜகவின் மொத்த வரவு ரூ.1775 கோடி. இதுவே 2022-23 நிதி ஆண்டில் ரூ.2360.8 கோடியாகவும் 2021-22 நிதி ஆண்டில் ரூ.1917 கோடியாகவும் இருந்தது.

2021-22ல் நிதியாண்டில் பாஜக ரூ.237 கோடியை வட்டி மூலம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.135 கோடியாக இருந்தது.

அபுதாபி லாட்டரி ஜாக்பாட்டில் ரூ.33 கோடியை அள்ளிய இந்தியர்! அதிர்ஷ்ட டிக்கெட் வாங்க இதுதான் ட்ரிக்!

BJP Got Nearly Rs 1,300 Crore Through Electoral Bonds, seven times more than what the Congress Received sgb

தேர்தல் மற்றும் பொதுப் பிரச்சாரத்திற்கான மொத்தச் செலவில், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த பாஜக ரூ.78.2 கோடியைச் செல்வு செய்துள்ளது. இது 2021-22ல் செலவு செய்த ரூ.117.4 கோடியில் இருந்து குறைந்துள்ளது. கட்சி வேட்பாளர்களுக்கு நிதி உதவியாக ரூ.76.5 கோடியை வழங்கியுள்ளது. இது 2021-22 இல் ரூ.146.4 கோடியாக இருந்தது.

மறுபுறம், காங்கிரஸ் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171 கோடி சம்பாதித்துள்ளது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.236 கோடியாக இருந்தது. பாஜகவும் காங்கிரஸும் தேசிய கட்சிகளில் முன்னணியில் உள்ளன.

மாநிலக் கட்சியான சமாஜ்வாதி கட்சி, 2021-22ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.3.2 கோடி சம்பாதித்துள்ளது. 2022-23ல், தேர்தல் பத்திரங்களிலிருந்து எந்தப் பங்களிப்பும் சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைக்கவில்லை. மற்றொரு மாநிலக் கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, 2022-23ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.34 கோடி பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 10 மடங்கு அதிகமாகும்.

'பயமா இருக்கு... ப்ளீஸ் இங்க வாங்க...' இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி பலியான பாலஸ்தீன குழந்தை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios