5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, திரைப்பட நடிகர்-நடிகைகளை இழுக்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக பாலிவுட்டின் நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் ராம்பால் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்.
பிரசாரம்
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்காக திரைப்பட நட்சத்திரங்கள் பிரசாரம் செய்வது வாடிக்கையாகி வருகிறது..
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் திரைப்பட நட்சத்திரங்களின் பிரசார ஏற்பாடுகள் துவங்கி விட்டன.
அர்ஜுன் ராம்பால்
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் ராம்பால், அமித்ஷாவை டெல்லி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.
இவர், மும்பையின் பிரபல மாடலாக இருந்து பாலிவுட் நட்சத்திரமாக பிரபலமானவர். இந்த சந்திப்பிற்கு பின் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
மோடிக்கு உதவி செய்ய
அப்போது ராம்பால் கூறுகையில், "அரசியலில் சேர நான் இங்கு வரவில்லை. நம் பிரதமர் நரேந்தர மோடிஜியின் பணிகளால் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். இவருக்கு நான் எந்தவகையில் உதவ முடியும் என ஆலோசனை செய்ய வந்தேன்" எனத் தெரிவித்தார்.
பாஜகவின் ஐந்து மாநில தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவையும் ராம்பால் சந்தித்தார். இதனால், தேர்தலுக்கு முன்பாக ராம்பால் பாஜகவில் சேரும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
தர்மேந்திரா-ஹேமமாலினி
பாஜகவில் பாலிவுட் நட்சத்திரங்கள் சேர்வதும், தேர்தலில் பிரச்சாரம் செய்வதும் புதிய விஷயமல்ல. ஏற்கனவே வினோத்கன்னா, சத்ருகன் சின்ஹா, ஹேமாமாலினி மற்றும் தர்மேந்திரா ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இவர்களில் வினோதகன்னா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். தற்போது, ஹேமாமாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா பாஜகவின் எம்பிக்களாக உள்ளனர்.
பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப்பும் பாஜகவிற்காக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST