2023-ம் ஆண்டிலும் இந்த உணவு தான் முதலிடம்.. ஸ்விகியில் ரூ.42 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த நபர்..!

நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்த ஆண்டின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Biryani Most ordered food in 2023 mumbai man ordered food rs 42.3 lakhs in this year Rya

2023 முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிக பயனர்களை கொண்ட பிரபல நிறுவனங்கள் மக்கள் தேடல் மற்றும் விருப்பம் ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்த ஆண்டின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடிய  2023 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி உள்ளது. தொடர்ச்சியாக 8-வது முறையாக பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது.

உணவு விநியோக தளம் ஸ்விகி இதுகுறித்த விவரங்களை வெளியிட்டது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணிகளை ஆர்டர் செய்தது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் 4,30,000 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன. ஜனவரி 1 முதல் நவம்பர் 23 வரையிலான ஆர்டர் தரவுகளின் அடிப்படையில், "How India Swiggy'd 2023- unwrapping India's year in on-demand convenience" என்ற அறிக்கையில் இந்த தரவு வெளியிடப்பட்டது. 2.49 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டருடன் அறிமுகமானார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மற்ற நகரங்களை விட, ஹைதராபாத்தில் அதிக பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒரு பயனர் 42.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு ஆர்டர் செய்ததார் என்று ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் உணவு ஆர்வலர் ஒருவர்  ஆண்டு முழுவதும் மொத்தம் 1,633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிக்கன் பிரியாணி மிகவும் பிடித்தமானதாகத் தொடர்ந்தாலும், சைவ உணவு உண்பவர்களும் அதிகளவு வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். ஒவ்வொரு 5 பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியின் நாளில், நவம்பர் 19 அன்று, இந்தியாவில் நிமிடத்திற்கு 188 பீட்சாக்களை ஆர்டர் செய்யப்பட்டது. அதிகபட்ச ஆர்டர்கள் சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பயனர் கணக்குகள் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டது.

துர்கா பூஜையின் போது, 7.7 மில்லியனுக்கும் அதிகமான குலாப் ஜாமூன் ஆர்டர்களுடன் ரசகுல்லாவை முந்தியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சைவ ஆர்டர்களில் மசாலா தோசையே முதலிடம் பிடித்தது.
மேலும், பெங்களூர் நாட்டின் "கேக் கேப்டலாக" இருந்தது, சாக்லேட் கேக்கிற்கு மட்டும் 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டன.  அன்னையர் தினத்தன்று (மே 14) அதிக அளவில் சாக்லேட் கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

மாங்காய் ஊறுகாய் முதல் திருவாதிரை களி வரை.. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 Recipes லிஸ்ட்..

மேலும் Swiggy Instamart க்கான தரவையும் இந்த அறிக்கை வழங்கியது. அதன்படி, அதில் அதிகம் தேடப்பட்ட பொருள் பால், அதைத் தொடர்ந்து தயிர் மற்றும் வெங்காயம் இடம்க்பெற்றுள்ளன. "Swiggy Instamart இன் முதல் ஐந்து நகரங்களில் இருந்து ஆர்டர் செய்த அனைவரையும் ஒரு நாட்டில் சேர்த்தால், அது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 17வது நகரமாக இருக்கும்-

சென்னையில் உள்ள ஒரு பயனர் ரூ.31,748 மதிப்புள்ள அதிகபட்ச ஆர்டரை செய்திருந்தார். காபி, ஜூஸ், குக்கீகள், சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை அவர் ஆர்டர் செய்திருந்தார். ஒரே நாளில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 67 ஆர்டர்களை செய்த ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பயனரால் மிகப்பெரிய ஆர்டர் செய்யப்பட்டது. டெல்லியில் மிக வேகமாக ஒரு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது, அங்கு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 65 வினாடிகளில் இன்ஸ்டெண்ட் நூடுல்ஸ் பாக்கெட்டை டெலிவரி செய்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios