Asianet News TamilAsianet News Tamil

Bird Flu Outbreak : கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு.. விரைவில் வாத்துகளை கொல்ல முடிவு..

கேரளாவின் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Bird flu outbreak reportedn in Kerala's Alappuzha; Mass culling of ducks soon Rya
Author
First Published Apr 18, 2024, 12:25 PM IST

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எடத்வா கிராம பஞ்சாயத்து வார்டு 1 மற்றும் செருதான கிராம பஞ்சாயத்து வார்டு 3ல் உள்ள மற்றொரு பகுதியில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் நோய் பறவை காய்ச்சல்(H5N1) உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில்,வாத்துகளை கொன்று அழிக்கும் பணியை துவக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.விரைவு அதிரடிப்படை. உருவாக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை விலங்குகள் நலத்துறை விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

இந்த நோய் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்பதால் தேவையில்லாமல் பீதி அடைய தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, இந்த அழித்தல் செயல்முறைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

H5N1 வைரஸ் என்றால் என்ன?

H5N1 என்பது ஒரு வகை காய்ச்சல் வைரஸ் ஆகும், இது முதன்மையாக பறவைகளை, குறிப்பாக கோழிகள் மற்றும் வாத்துகள் போன்றவற்றை பாதிக்கிறது. இது மிகவும் கடுமையா நோய்தொற்றாகும். அதாவது இது கடுமையான நோய் மற்றும் பாதிக்கப்பட்ட பறவைகளில் அதிக இறப்பு விகிதங்களை ஏற்படுத்தும்.

H5N1 என்பது இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் பல துணை வகைகளில் ஒன்றாகும், மேலும் இது மற்ற விலங்குகள் மற்றும் எப்போதாவது மனிதர்களையும் பாதிக்கலாம். பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடர்பு, அவற்றின் கழிவுகள் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் இந்த வைரஸ் பரவலாம். இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு இன்னும் எளிதில் பரவவில்லை, ஆனால் அது ஏற்படும் போது, இறப்பு விகிதம் 60 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அறிகுறிகள்:

மனிதர்களில் H5N1 நோய்த்தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் தசைவலி போன்ற பொதுவான காய்ச்சல் போன்ற அறிகுறிகளிலிருந்து கடுமையான சுவாச நோய், நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்பு வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios