பீகார் ரயில் நிலையத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் பறிமுதல் கிடந்தன. இதை பார்த்ததும், போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பீகார் மாநிலம் சப்ரா ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, சஞ்சய் பிரசாத் என்பவர், சில மூட்டைகளை கொண்டு வந்தார். அதை பார்த்ததும், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து அவரை மறித்து நிறுததிய போலீசார், அவரிடம் இருந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில், மனித எலும்புக்கூடுகள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து 16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புக் கூடுகள், பூடான் கரன்சிகள், பல்வேறு நாடுகளின் ஏடிஎம் கார்டுகள், வெளிநாட்டு சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

இந்த எலும்புக்கூடுகளை பிரசாத், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மாநிலங்களில் இருந்து கொண்டு வந்ததாகவும, அதனை இமயமலை பகுதியில் மர்மநபர்கள் சிலருக்கு விற்பனை செய்கிறார் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு எலும்புக்கூடுகள் எப்படி கிடைத்தது என தீவிரமாக விசாரிக்கின்றனர்.