`பத்மாவதி' திரைப்படி எதிர்ப்பு கோஷ்டியில் பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமாரும் இணைந்து இருக்கிறார். இயக்குனர் உரிய விளக்கம் அளிக்கும் வரையில் பீகாரில் அந்த படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்றும், படத்தில் ராணி (தீபிகா படுகோனே) நடனம் ஆடும் காட்சியை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

நிதிஷ்குமார்

`பத்மாவதி' திரைப்படத்திற்க எதிராக பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் (குறிப்பாக பா.ஜனதா கட்சியினர்) எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தலைவரும், பீகார் முதல் அமைச்சருமான நிதிஷ்குமாரும் `பத்மாவதி' எதிர்ப்பு கோஷ்டியில் இணைந்து இருக்கிறார்.

அனுமதிக்க முடியாது

`பத்மாவதி' படம் குறித்து அவர் கூறியதாவது-

‘‘சர்ச்சைக்குரிய `பத்மாவதி' படம் குறித்து அதன் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும் வரை அந்தப் படத்தை பீகார் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க முடியாது.

`பத்மாவதி' படம் குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்படுவதால் படத்தின இயக்குனர் தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் படத்தில் ரணி `பத்மாவதி' (தீபிகா படுகோனே) நடனம் ஆடும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.