'பாரத் - ஜனநாயகத்தின் தாயகம்' ஜி20 மாநாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகம் இதுதான்!
'பாரத், ஜனநாயகத்தின் தாய்', 'இந்தியாவில் தேர்தல்' என்ற தலைப்புகளில் இரண்டு புத்தகங்கள் ஜி20 உச்சிமாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இந்தியாவை 'பாரத்' என்று மாற்றுவது குறித்த சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இரண்டு சிறிய புத்தகங்களை மத்திய அரசு ஜி20 உச்சிமாநாட்டிற்கு வந்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு விநியோகித்துள்ளது.
சென்ற செப்டம்பர் 9-10 தேதிகளில் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. 'பாரத், ஜனநாயகத்தின் தாய்', 'இந்தியாவில் தேர்தல்' என்ற தலைப்புகளில் இரண்டு புத்தகங்கள் தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. 'இந்தியாவில் தேர்தல்' என்ற நூலில் இந்திய தேர்தல் வரலாறு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மோடி செய்வது தான் சரி! மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பாராட்டு!
'பாரத், ஜனநாயகத்தின் தாய்' என்ற 52 பக்க புத்தகத்தின் தொடக்கத்திலேயே 'பாரத்' என்பது தான் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த பெயர் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் 1946-48 ஆண்டுகளில் இதைப்பற்றி விவாதிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"இந்திய நெறிமுறைகளின்படி, நல்லிணக்கம், தேர்வு செய்யும் சுதந்திரம், பல கருத்துகளுக்கான சுதந்திரம், சகிப்புத்தன்மை, சமத்துவம், மக்கள் நலனுக்கான நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த சமூகம் ஆகிய மதிப்பீடுகளை உள்ளடக்கியது தான் ஜனநாயகம். இவை அனைத்தும் குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ அனுமதிக்கின்றன” என்று நூலில் கூறப்படுகிறது.
வேதங்கள் மற்றும் ராமாயணம் போன்ற பண்டைய நூல்களைப் பற்றி விவாதிக்கும் பகுதியில், சபா, சமித், சன்சாத் போன்ற சொற்கள் நாடாளுமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளைக் குறிக்கின்றன என்றும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் புத்தகம் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து புத்தகத்தைப் படிக்கலாம்.
https://ebook.g20.org/ebook/bharatmod/index.html
தடையை நீக்கிய வனத்துறை... 9 வருஷம் கழிச்சு பாணத் தீர்த்தம் அருவிக்கு ஜீப்பில் செல்ல அனுமதி!