Asianet News TamilAsianet News Tamil

Rahul Yatra: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக உயர்த்த பாரத் ஜோடோ யாத்திரை நடத்தவில்லை: காங்கிரஸ் திட்டவட்டம்

ராகுல் காந்தியை 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உயர்த்திப்பிடிக்க பாரத் ஜோடோ யாத்திரை நடத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Bharat Jodo Yatra will not present Rahul Gandhi as the Prime Ministerial contender for the 2024 elections: Ramesh Jairam
Author
First Published Jan 7, 2023, 4:31 PM IST

ராகுல் காந்தியை 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உயர்த்திப்பிடிக்க பாரத் ஜோடோ யாத்திரை நடத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். 

இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசத்தைக் கடந்துள்ளது. 2வது கட்டமாக ஹரியானாவில் ராகுல் காந்தி யாத்திரையில் உள்ளார். 

H1-B விசா கட்டணத்தை 332 சதவீதம்வரை உயர்த்துகிறது அமெரிக்கா! எவ்வளவு உயர வாய்ப்பு?

Bharat Jodo Yatra will not present Rahul Gandhi as the Prime Ministerial contender for the 2024 elections: Ramesh Jairam

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை எப்போது முடியும், பயன்பாட்டுக்கு வரும்? நிதின் கட்கரி பதில்

இந்த யாத்திரை ஹரியானா வழியாக பஞ்சாப் சென்று, அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளது. 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவே பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளி்க்கையில் “  2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக உயர்த்திப் பிடிக்க பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படவில்லை. இது சித்தாந்தங்களை முன்வைக்கும் யாத்திரை, அதன் பிரதான முகமாக ராகுல் காந்தி இருக்கிறார். இது ஒரு தனிநபரின் யாத்திரை அல்ல. 

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்: நிதிஷ் அரசின் தில்லான திட்டம்

கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, காஷ்மீர்வரை செல்கிறது. தற்போது ஹரியானாவில் உள்ள கர்னால் பகுதியை கடந்துள்ளது. இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தி 3 மிகப்பெரிய பிரச்சினைகளை மக்கள் முன் வைத்துள்ளார், ஒன்று பொருளாதாரச் சமத்துவம், சமூகப்பிளவு, அரசியல் எதேச்சதிகாரம் ஆகிய 3 விஷயங்களை எழுப்பியுள்ளார்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios