Nitin Gadkari: சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை எப்போது முடியும், பயன்பாட்டுக்கு வரும்? நிதின் கட்கரி பதில்
ரூ.17ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் முடிந்து, எப்போது பயன்பாட்டுக்குவரும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
ரூ.17ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் முடிந்து, எப்போது பயன்பாட்டுக்குவரும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு –சென்னை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகளை நேற்று பார்வையிடுவதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
17ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக பெங்களூரு-மைசூரு இடையே 52கி.மீ கிரீன்பீல்ட் சாலைத் திட்டமும் நடக்கிறது. இதன் மதிப்பு ரூ.9ஆயிரம் கோடியாகும்.
தண்ணீர் குழாயில் ஐஸ்கட்டிகள்! கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர்!
பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் திறந்து வைப்பார்கள். பெங்களூரு –மைசூரு இடையிலான 52கி.மீ சாலைப் பணிகள் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடையும்.
பெங்களூரு –மைசூரு இடையிலான நெடுஞ்சாலை 10 வழித்திட்டமாகும். இருபுறமும் 4 சாலைகள் கிராமங்கள், புறநகர்ப்பாதைகளை இணைக்கும் விதத்தில் இருக்கும். 6 சாலைகள் பெங்களூரு-மைசூரு இடையே இருக்கும்.
கடந்த 10 நாட்களில் இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் உடலில் 11 வகையான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு
பெங்களூரு-மைசூரு திட்டம் இரு பிரிவுகளாக இருக்கிறது. ஒன்று பெங்களூரு முதல் நிடாகட்டா வரையிலும் மற்றொரு திட்டம் நிடாகட்டா முதல் மைசூரு வரையிலும் இருக்கிறது. இதன் மூலம் பெங்களூரு-மைசூரு இடையிலான பயண நேரம் 70 நிமிடங்களாகக் குறையும்.இந்த சாலைகள், கர்நாடகாவின் குடகு, தமிழகத்தில் உதகமண்டலம், கேரளா ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் இருக்கும்.
பெங்களூரு-எக்ஸ்பிரஸ் சாலை 285.3 கி.மீ தொலைவு கொண்டது, 4 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பயண நேரம் வெகுவாகக் குறையும். குறிப்பாக சரக்குப் போக்குவரத்து விரைவாக இருக்கும், ஏற்கெனவே 231கி.மீ சாலைக்கான பணிகள் முடிந்துவிட்டதால், 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாலை தயாராகிவிடும். இந்த சாலையில் 288கி.மீட்டரில் 243 கி.மீ பகுதி கர்நாடக மாநிலத்துக்குள்ளும், 45 கி.மீ பகுதி தமிழகத்துக்குள்ளும் வருகிறது.
பெங்களூருவில் இருக்கும் சாட்டிலைட் ரிங்ரோட்டை, புனே-பெங்களூரு சாலையுடன் இணைக்கவும் பணிகள் நடந்து வருகிறது. இந்தத் திட்டம் முடிந்தால், பெங்களூரு-மும்பை இடையே பயணம் ஆறரை மணிமுதல் 7 மணிநேரமாகக் குறையும்.
இது தவிர வடமாநிலங்கள், தென் மாநிலங்களை இணைக்கும் சாலைப்பணிகளும் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.48ாயிரம் கோடியாகும். சூரத், அகமதுநகர், சோலாபூர், குர்னூல் இணைக்கப்படும்.குர்னூலில் இருந்து, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் சாலைகள் இணைக்கப்படும்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆதரவு
சூரத்-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் சோலாபூர்-குர்னூல் எக்ஸ்பிரஸ் சாலை 6 மாநிலங்களைக் கடந்து செல்லும். குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழகத்தைக் கடந்து செல்லும். இதன் மொத்த நீளம், 1,270 கி.மீ, திட்டத்தின் மதிப்பு ரூ.48ஆயிரம் கோடியாகும்
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்