தண்ணீர் குழாயில் ஐஸ்கட்டிகள்! கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர்!
காஷ்மீரில் உள்ள தால் ஏரி பகுதியில் தண்ணீர் குழாய்களில் உள்ள நீர் உறைந்து ஐஸ் கட்டிகளாக வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலையே நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையே பூஜ்ஜியத்துக் கீழ் இருக்கிறது. கடும் பனிப்பொழிவால் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள்.
டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை காஷ்மீரில் கடும் குளிர் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் குளிர் மக்களை நடுங்கவைத்து வருகிறது.
இச்சூழலில் ஶ்ரீநகர் அருகே உள்ள தால் ஏரி பகுதியில் இருக்கும் தண்ணீர் குழாய்களில் நீர் உறைந்துபோய் ஐஸ்கட்டிகளாக மாறியுள்ளன. குழாயைத் திறக்கும்போது தண்ணீருடன் சேர்ந்து ஐஸ்கட்டிகளும் கொட்டுகின்றன. பல இடங்களில் குழாயினுள் தண்ணீர் ஐஸ்கட்டியாக உறைந்து அடைத்துக்கொள்ளும் நிலை உள்ளது.
சபரிமலை அரவண பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய்: ஆய்வில் தகவல்
இதனால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் குழாயில் உள்ள தண்ணீர் உறைநிலைக்குச் செல்லாமல் குழாய்க்கு அருகே தீ மூட்டி வைக்கின்றனர். ஶ்ரீநகரில் இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதிகபட்சமாக பகாலம் பகுதியின் வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது.
வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.