Asianet News TamilAsianet News Tamil

BF.7 Omicron sub-variant: சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு தடை இல்லை; ஏன்?

சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் வரும் விமானங்களுக்கு இதுவரை தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

BF.7 Omicron sub-variant: Central Govt says no decision is taken on to stop flights from China
Author
First Published Dec 22, 2022, 2:30 PM IST

சீனாவில் கொரோனா தொற்று பெரிய பளவில் பரவி மக்கள் மருத்துவமனைகளில் நிறைந்து வருகின்றனர்.  மரணங்களும் அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமல்லாது, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் இந்த தொற்று பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வழக்கம்போல், மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் மாஸ்க் அணிந்து வந்து இருந்தனர். பிரதமர் மோடி இன்று மதியம் கொரோனா தொடர்பாக உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சீனாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தன. ஆனால், அவ்வாறு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு... 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்!!

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்து இருக்கும் விளக்கத்தில், ''சீனாவில் இருந்து இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவில் இருந்து சீனாவுக்கோ நேரடி விமானப் போக்குவரத்து இதுவரை இல்லை. ஆனால், சீனா வழியாக வரும் இணைப்பு விமானங்கள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதுதொடர்பான இறுதி முடிவு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையிடம் இருந்து வரும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி இருக்கும் ஒமிக்ரான் வகை திரிபான BF 7 வைரஸ் தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நான்கு பெறும் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டு வந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும்  ஒமிக்ரான் BF 7 வகை வைரஸ் உள்பட நாட்டில் பத்து வகையான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

PM Covid Meeting :பிளான் பண்ணிடிங்க! பிரதமர் கோவிட் மீட்டிங் எதுக்குணு புரிஞ்சிருச்சு! காங்கிரஸ் கிண்டல்

இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ''சீனாவில் நிலவி வரும் கொரோனா தொற்றை கருதி, அந்த நாட்டில் இருந்து வரும் மற்றும் இந்தியாவில் இருந்து சீனா செல்லும் விமானங்கள் அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும். புதிய வகை கொடிய பிறழ்வாக மாறி இருக்கும் BF 7 வகை கொரோனா சீனா, ஜப்பான்,  தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவும் சிந்தித்து, விரைவில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios