Bengaluru: பல்கலை விழாவில் நடனம் ஆடியபோது மயங்கி விழுந்த மாணவர் மரணம்
இரண்டு நாட்களுக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர் பல்கலைக்கழக விழாவில் நடனமாடியபோது உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவர் பெயர் அபிஜித் ஷிண்டே என்றும் எம்.ஏ. முதலாம் ஆண்டு மாணவர் என்றும் காவல்துறையினர் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவித்த பெங்களூரு போலீசார், விழாவில் நடனமாடிக்கொண்டிருந்தபோது நிலைகுலைந்து விழுந்த மாணவர் மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கின்றனர்.
26 வயதான அந்த மாணவரின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அப்போது அந்த மாணவர் பற்றி கூடுதல் விவரங்கள் தெரியும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே பல்கலைக்கழக நிர்வாகம் சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள குறிப்பில், “பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் நேர்ந்தது எங்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வருடாந்திர மாணவர் விழாவின் தொடக்க நிகழ்வில் நடனம் ஆடிய அவர் எதிர்பாராத நேரத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளித்தும், காப்பாற்ற முடியவில்லை. மாணவரின் இறப்புக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
Gym Death: ஜிம்மில் புஷ்-அப் செய்தவருக்கு மாரடைப்பு! 24 வயது இளம் காவலர் பலி!
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து விடுதிக்குச் சென்றுவருவதற்கான பேருந்திற்காக நிர்வாகத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பிப்ரவரி 22 முதல் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல் நாள் மட்டும் அபிஜித் ஷிண்டே பங்கேற்றிருக்கிறார். பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை எனவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
"மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதன் முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகுதான் மாணவரின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியுக்கூடும். அதற்கு முன் எங்களால் எந்தக் காரணமும் கூற இயலாது" என்று காவல்துறை கூறுகிறது.
Radha Vembu: யார் இந்த ராதா வேம்பு? ரூ.21,000 கோடி சொத்துடன் இந்தியாவின் பணக்காரப் பெண்!