Gym Death: ஜிம்மில் புஷ்-அப் செய்தவருக்கு மாரடைப்பு! 24 வயது இளம் காவலர் பலி!

ஹைதராபாத்தில் 24 வயது இளம் காவலர் உடற்பயற்சி செய்யும்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

24-year-old Hyderabad cop dies after collapsing in gym

இளம் காவலர் ஒருவர் ஜிம்மில் உடற்பயற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் நகரில் போவன்பல்லியில் வசிக்கும் கான்ஸ்டபிள் விஷால். 24 வயதே ஆன இவர் ஆசிப் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

வியாழன் அன்று ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அப்படியே கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்தக் காட்சி உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வைரலானது. அதில், விஷால் புஷ்-அப் செய்துவிட்டு வேறொரு செய்யச் செல்லும் அவர் திடீரென தடுமாறி கீழே சாய்கிறார்.

Chennai: தூங்கும் குழந்தையைக் கடந்த முயன்ற நபரை துரத்திப் பிடித்து மொத்திய ஊர்மக்கள்!

gym death

கீழே விழுந்தவுடன் அங்கிருந்த மற்றவர்கள் உதவ விரைகிறார்கள். அவர்களில் ஒருவர் உடற்பயிற்சி பயிற்சியாளரை அழைக்கிறார். இந்தச் சம்பவம் ஜிம்மில் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் பதிவாகியுள்ளது.

விஷாலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர்.

ஜிம்மில் உடற்பயற்சியில் ஈடுபட்டிருப்பவர் உயிரிழ்ந்த இச்சம்பவம் சமீபத்தில் நடந்த மற்றொரு நிகழ்வாகும். அண்மைக் காலங்களில் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

தேசிய பல்லூயிரியியல் தகவல் மையம் (NCBI) அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு மாரடைப்பு மற்றும் பக்கவாத்தால் ஏற்படுகின்றன.

Radha Vembu: யார் இந்த ராதா வேம்பு? ரூ.21,000 கோடி சொத்துடன் இந்தியாவின் பணக்காரப் பெண்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios