2023-ல் உலகின் மிகவும் போக்குவரத்து நெரிசலான இடங்கள் : 6-வது இடத்தில் பெங்களூரு.. புதிய தகவல்..
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரமாக பெங்களூரு உள்ளது என்று டாம் டாம் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டச்சு நாட்டை சேர்ந்த டாம் டாம் என்ற தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட போக்குவரத்துக் குறியீட்டின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரமாக பெங்களூரு உள்ளது. அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் மிகவும் நெரிசலான நகரங்களின் உலகளாவிய தரவரிசையில் பெங்களூரு 6-வது இடத்தில் உள்ளது, 2022 இல் பெங்களூரு 2-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 6-வது இடத்தை பிடித்துள்ளது.
தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைநகராக கருதப்படும் பெங்களூரு மிகவும் நெரிசலனா இடங்கள் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்திருந்தது ஆச்சர்யமில்லை தான். பெங்களூருவில் சராசரியாக 10 கி.மீ தூரத்தை 28 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது., 2022 10 கி.மீ தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் ஆன நிலையில் தற்போது அதில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு
கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பெங்களூரு மக்கள் ஒரு ஆண்டில் 132 மணிநேர போக்குவரத்து நெரிசலில் இழக்க நேரிடுகிறது. 2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் நெரிசலான நகரங்களில் லண்டன் முதலிடத்தில் உள்ளது, இந்த பட்டியலில் அயர்லாந்து 2-வது இடத்திலும், கனடாவில் டொராண்டோ 3-வது இடத்திலும், இத்தாலியின் இமிலன் நகர் 4-வது இடத்திலும், பெரு நாட்டின் லிமா 5-வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் பெங்களூரு 6-வது இடத்திலும் புனே 7-வது இடத்திலும் உள்ளது. புனேவில் 10 கி.மீ தூரத்தை கடக்க 27 நிமிடங்கள் 50 நொடிகள் ஆகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 44 வது இடத்திலும், மும்பை 54 வது இடத்திலும் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் பெங்களூருவில் பயணம் செய்வதற்கான மோசமான நாள் செப்டம்பர் 27 (புதன்கிழமை) எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அன்றைய தினம் சராசரியாக 10 கிலோமீட்டர் பயண நேரம் 32 நிமிடங்கள் 50 வினாடிகள் ஆனது. . தரவுகளின்படி, கடந்த பெங்களூரு வாசிகள் 257 மணிநேரம் வாகனம் ஓட்டினர், நெரிசல் காரணமாக 132 மணிநேரம் ஓட்டியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாம் டாம் போக்குவரத்து நெரிசல் பட்டியல் உலகின் 55 நாடுகளில் உள்ள 387 நகரங்களை உள்ளடக்கியது. நகரங்களின் சராசரி பயண நேரம், எரிபொருள் செலவுகள் மற்றும் CO2 உமிழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
உத்தராகண்ட் பொது சிவில் சட்ட வரைவில் புதிய சர்ச்சை! நீதி தேவதையின் சிலையில் மாற்றம் ஏன்?
டாம்டாம் (போக்குவரத்து) துணைத் தலைவர் ரால்ஃப்-பீட்டர் ஷாஃபர் இதுகுறித்து பேசிய போது “ உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிப்பதால், போக்குவரத்து நெரிசல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விளைவுகள் ஆகியவை அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாக மாறியுள்ளன.
நகர்ப்புறங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவது தற்போதைய போக்குவரத்து நிர்வாகத்திற்கு அவசியம். வரலாற்றுப் போக்குவரத்துத் தரவுகளின் பகுப்பாய்வு, வளர்ந்து வரும் நகரங்கள் மிகவும் திறமையான சாலை அமைப்புகளை வரைபடமாக்குவதற்கும் இருப்பிட நுண்ணறிவைப் பயன்படுத்தி சிறந்த மண்டலத்தைத் திட்டமிடுவதற்கும் உதவும்.” என்று கூறினார்.