பெங்களூரு நகரில் இன்று பிற்பகலில் ஓயிட் ஃபீல்டு என்ற இடத்தில் வெடி வெடித்ததுபோல் பயங்கர சப்தம் கேட்டதால் அப்பகுதி மக்களே பீதியில் உறைந்துள்ளனர். 

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு, இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமாக உள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.20 மணியளவில், திடீரென பயங்கர சப்தம் கேட்டது. ஏதோ ஒரு பகுதியில் மட்டும் இந்த சப்தம் கேட்கவில்லை. ஒரே நேரத்தில், பல்வேறு பகுதிகளிலும் இந்த சப்தம் உணரப்பட்டது.

கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு எலக்ட்ரானிக் சிட்டி என சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர். இந்த சப்தத்தை அறிந்த மக்கள் பீதி அடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர். 

இந்த பயங்கரமான சப்தம்  எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், ஒயிட் ஃபீல்டில் விமானப்படை ஒத்திகை நிகழ்ச்சியில் சப்தம் ஏற்பட்டதாக டுவிட்டரில் பலர் தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், டுவிட்டரில் வெளியான தகவல் குறித்து விமானப்படை தரப்பில் இதுவரை எற்த விளக்கமும் அளிக்கவில்லை.