Asianet News TamilAsianet News Tamil

ஆம்புலன்சுக்காக ஜனாதிபதி வாகனத்தை நிறுத்திய ‘டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர்’... குவியும் பாராட்டுக்கள்!

Bengaluru traffic police cop stops Presidents convoy to make way for ambulance wins hearts
Bengaluru Cops Heroes For Allowing Ambulance Ahead Of President's Convoy
Author
First Published Jun 21, 2017, 7:47 AM IST


கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆம்புலன்ஸ் வருகைக்காக, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் வாகனத்தையே போக்குவரத்து காவலர் ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

பிரணாப் முகர்ஜி வருகை

பெங்களூரு உல்சூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நிஜலிங்கப்பா. 
பெங்களூரில் நம்ம மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க   ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார். இதனால், போக்குவரத்தை சீர் செய்வதற்காக டிரினிட்டி சர்க்கில் பகுதியில் நிஜலிங்கப்பாவுக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில், மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கிவைத்தபின்,  ஆளுநர் மாளிக்கைக்கு பிரணாப் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது டிரினிட்டிசர்க்கில் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், வாகனங்கள் வரிசையில் நின்று இருந்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம்

அப்பகுதியில் உள்ள ஹஸ்மத் மருத்துவமனையில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்நோயாளி ஒருவரை ஆம்.எம். சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்து. ஆநால்,  நெரிசலால், செல்ல வழியில்லாமல் ஆம்புலன்ஸ், நின்றுக்கொண்டு, சைரன் ஒலித்துக்கொண்டு இருந்தது.

Bengaluru Cops Heroes For Allowing Ambulance Ahead Of President's Convoy

உயர் அதிகாரிக்கு தகவல்

இதைப் பார்த்த அப்பகுதியில் பணியில் இருந்த எம்.எல்.நிஜலிங்கப்பா, தனது உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும், ஜனாதிபதி வாகனத்தை நிறுத்த அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதிக்கவே, அந்த வழியாக அணிவகுத்து வந்த ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களை நிஜலிங்கப்பா, நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி செய்தார்.

பாராட்டு, பரிசு

நிஜலிங்கப்பாவின் இந்தச் செயலானது போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டு இருந்த மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது. மேலும், பேஸ்புக், டுவிட்டர்,வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் நிஜலிங்கப்பாவை புகழந்தும், பாராட்டியும் டுவிட்டுகள், கருத்துகள் குவியத் தொடங்கின.

இதையடுத்து, நாட்டின் முதல் குடிமகன் வரும் வாகனமாக இருந்தபோதிலும், உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாகனத்தை மறித்து ஆம்புலன்ஸ் செல்லநிஜலிங்கப்பா வழி செய்தார். இதற்கு பாராட்டு தெரிவித்த பெங்களூரு மாநகராட்சி போலீஸ் ஆணையர் பிரவீண் சூட், நிஜலிங்கப்பாவுக்கு விருதும், பரிசும் அளித்து பாராட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios