பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. உறுதி அளித்துள்ளது.

பெங்களூரு கபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேகிகப்படும் நபரின் புதிய படங்களை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்படுபவர் தொடர்பான எந்த தகவல் கிடைத்தாலும் வழங்குமாறு பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை சமூக ஊடக தளங்களில் என்ஐஏ வெளியிட்டது. இரண்டு வீடியோக்களை வெளியிட்ட என்ஐஏ அவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சந்தேகிக்கப்படும் நபரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. உறுதி அளித்துள்ளது.

சந்திரயான் 4 திட்டத்தில் டபுள் ராக்கெட்! மாஸ் காட்டும் இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்!

Scroll to load tweet…

49 வினாடிகள் கொண்ட முதல் வீடியோ, அந்த நபர் பெங்களூரு நகரப் பேருந்தில் நுழைந்து இருக்கையில் அமர்வதைக் காட்டுகிறது. பின் அவர் நடு இருக்கையில் இருந்து எழுந்து சிசிடிவி கேமராவைத் தவிர்க்க பேருந்தின் பின்புறமாகச் செல்கிறார். பேருந்தில் பின்புறம் இருந்து இறங்குவதை வீடியோவில் காண முடிகிறது.

இதற்கிடையில், பெங்களூருவில் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் கபே உணவக சனிக்கிழமை காலை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது. காலையில் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் உணவகத்தின் முன்பு வரிசையில் காத்திருப்பதையும் காண முடிந்தது. ஓட்டல் இயங்கத் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்த உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் குறைந்தது 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சின்னப்பிள்ளைக்கு வீடு... திமுகவின் ஸ்டிக்கர் அரசியல்... முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி!