பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சி செய்கிறது என்று குறைகூனியுள்ளார். இது பற்றி முதல்வரின் ட்விட்டரில் பதிவுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் சின்னப்பிள்ளை அவர்களுக்கு வீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளை அவர்களுக்கு 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதற்கு முன்பே பிரதமர் வாய்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றபோது, ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருதும் சின்னப்பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் விருது வழங்கும்போது அவரது காலில் விழுந்து வணங்கினார்.

இவ்வாறு நாடு முழுவதும் கவனம் பெற்றவர் மூதாட்டி சின்னப்பிள்ளை. இவர் தற்போது சொந்த வீடு இல்லாமல் மூத்த மகன் வீட்டில் வசிக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் தன்னைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, தனக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக உறுதி அளித்தார் என்றும் ஆனால், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.

இதெல்லாம் சரிப்பட்டு வராது.. நேராக ஆளுநர் மாளிகைக்கு வண்டியை விடும் இபிஎஸ்? என்ன காரணம் தெரியுமா?

Scroll to load tweet…

இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மூதாட்டி சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். கவலை வேண்டாம்! ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்!" என்று அறிவித்தார்.

இந்தப் பதிவைக் கண்டுப் பதறிப்போன பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சி செய்கிறது என்று குறைகூனியுள்ளார். இது பற்றி முதல்வரின் ட்விட்டரில் பதிவுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

Scroll to load tweet…

"சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தில் திமுகவைச் சேர்ந்தவரின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை திமுக அரசால் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளாமல் திடீரென மத்திய அரசின் திட்டத்தை அரசியலாக்க முயற்சி செய்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

"ஆவாஸ் யோஜனா என்பது மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியளிக்கிறது. பயனாளியை கண்டறிந்து திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது. கலெக்டரிடம் பலமுறை முறையிட்ட பிறகு, சின்னப்பிள்ளை அவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் வீடு கட்டப் போதுமானதாக இல்லை. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.

"கடந்த 2 ஆண்டுகால திமுக ஆட்சியின் திறமையின்மையை மறைக்க எப்போதும் போல் மத்திய அரசு திட்டங்களில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள். இந்த விஷயத்தை அரசியலாக்கியதற்காக தமிழக முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று சொல்கிறார் அண்ணாமலை.

திமுக கூட்டணியில் இணைந்த கமலின் ம.நீ.ம.. 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு..